தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை […]
இன்றைய ராசி பலன்கள் – 19.4.2018
19.4.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து சதுர்த்தி திதி பின்னிரவு 1.29 மணி வரை பின் பஞ்சமி திதி. ரோஹிணி நட்சத்திரம் இரவு 12.28 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- இன்று முழுவதும் மரண யோகம் இருப்பதால் குறிக்கப்படவில்லை. சூலம்-தெற்கு. […]
தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார். இது தொடர்பாக பூஷன் குமாரின் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரபாஸின் அடுத்த […]
தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி
அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து […]
ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக […]
இன்றைய ராசி பலன்கள் – 18.4.2018
18.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 5ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திருதியை திதி பின்னிரவு 3.34 மணி வரை பின் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 2.17 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 2.17 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை […]
பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் […]
தென் மாவட்டங்களின் மண் சார்ந்த படைப்பாக உருவாகி உள்ளது ” தொரட்டி “
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் […]
காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இயக்குநர் ராகேஷ்..!
முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் […]
இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா !
கதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம் ‘ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு […]