Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 18.4.2018

18.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை திருதியை திதி பின்னிரவு 3.34 மணி வரை பின் சதுர்த்தி திதி.
கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 2.17 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 2.17 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 2 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-0;
ஸ்ரீ உய்யக்கொண்டார் குருபூஜை.
பரசுராம ஜெயந்தி.
அட்சய திருதியை. தானம் செய்வது சிறப்பு. தங்கம் வாங்கி சேர்ப்பது பாவம் தங்கம் வாங்கி தானம் செய்யலாம்.

18.4.2018 புதன்கிழமை ராசிபலன். அட்சய திருதியை ஸ்பெஷல்.

மேஷம்: இடம் வாங்கலாம் வீடு கட்டலாம். வாகன வாங்கலாம். பழைய வாகனத்தை வாகனமில்லதவர்க்கு தானமாக கொடுக்கலாம்.
ரிஷபம்: நவின ஆடைகள் வாங்கலாம் வாங்கும்போது உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆடைகள் வாங்கி தானம் செய்யலாம்.
மிதுனம்: சிறப்பாக கல்வி வரும். குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தானம் செய்யலாம்.
கடகம்: தயிர் சாதம் தண்ணீர் தானம் உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும்.
சிம்மம்: படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க உதவுங்கள். நீங்கள் செல்வந்தர் ஆகலாம்.
கன்னி: நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்படிப்புக்கு உதவுங்கள். உங்கள் குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள்.
துலாம்: ரத்த தானம் செய்யுங்கள். உடல்நிலை ஆரோக்கியமாக அமையும்.
விருச்சிகம்; அறக்கட்டளை அமைத்து வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள் கிட்டும்.
தனுசு: கல்வி கலைகள் தானமாக கற்றுக் கொடுங்கள். எல்லா பாக்கியமும் நிறைவாக அமையும்.
மகரம்: உடல் உறுப்புகள் தானம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியம் சிறக்கும்.
கும்பம்: ஆலயம் சார்ந்த தானம் செய்யலாம். தெய்வீக பலம் பெருகும்.
மீனம்; கற்ற கல்வியை தானமாக விதையுங்கள் எதிர்காலம் சந்ததியினர் அறுவடை செய்துகொள்வார்கள்.

ஜோதிட பற்று கொண்ட பெரியோர்களே அட்சய திருதியை தானம் கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளும் நாள். வாங்கி சேர்த்து பாவம் தேடும் நாள் அல்ல.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin . 9842521669.

Back To Top
CLOSE
CLOSE