Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: July 2018

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி மிகவும் திறமையானவர் – தயாரிப்பாளர் பி பஞ்சவர்ணம்

தனது புதுமையான கதை சொல்லல் மூலம் புதிய ‘திகில்’ மற்றும் ‘சஸ்பென்ஸ்-மிஸ்டரி’ வகை திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. நிச்சயமாக, அவரது முதல் படம் ‘முந்தினம் பார்த்தேனே’ மெல்லிய காதல் கதை, அதுவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது. தற்போது அவரது சிஷ்யரான கிருஷ்ணா பாண்டி இந்த அனைத்து வகை படங்களின் கலவையாக, தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘எம்பிரான்’, படத்தை ஒரு சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார். “உண்மையில், என்னை […]

‘Viu’ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது.

உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான ‘Viu’ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது. Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 சந்தைகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும். உலகளாவிய Viu Originalsல் […]

ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!

‘ ஜிப்ரான்’ என்ற பெயர் அவரது அழகான இசையமைப்பிற்கான இசை வாசனையை உடனடியாக வெளிப்படுத்துகிறது. வழக்கமான இசையை வழங்குவதை விட்டு, அருமையான இசையை வழங்கும் அவருடைய தனித்துவமான இசை நயம் மற்றும் ஒழுக்கம் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. உண்மையில், ஜிப்ரான் பல திரைப்பட இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். குறிப்பாக அறிமுக இயக்குனர்கள் அவரின் இசை தங்களின் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் ஹன்சிகா மொத்வானி நடிக்கும் […]

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்

அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளான ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் நடத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது தமிழர் விழாவின் மூன்றாம் நாளான ஜூலை 2 -ம் தேதி 2018 அன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆரி கலந்து கொண்டு சிறப்பித்தார், இவ்விழா மேடையில் தமிழர்களின் ஆரோக்கிய வாழ்வு மேம்பட அக்கறை கொண்டு அயராது உழைக்கும் நடிகர் ஆரிக்கு, பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருவதற்காகவும், சமீபத்தில் […]

தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், […]

“லக்‌ஷ்மி” ஒரு மிகப்பெரிய நடன திருவிழா

நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் “லக்ஷ்மி”. நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. மேலும் “லக்‌ஷ்மி” ஒரு மிகப்பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படும், அங்கீகரிக்கப்படும். “லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு […]

​”கடைக்குட்டி சிங்கத்தில்” ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !

கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல.உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.இவர்கள் விரைவில் வெளியாகவுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு […]

சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ஜெஸி’

சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பி.பீ.எஸ். ஈசா குகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெஸி’. கின்னஸ் சாதனைப் படம் ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு. இது ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம் .இதில் நகைச்சுவை கலக்கவில்லை .பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட இயக்குனர் ,பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார் .இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார் .அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் […]

தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர் […]

Back To Top
CLOSE
CLOSE