Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“லக்‌ஷ்மி” ஒரு மிகப்பெரிய நடன திருவிழா

நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் “லக்ஷ்மி”. நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. மேலும் “லக்‌ஷ்மி” ஒரு மிகப்பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படும், அங்கீகரிக்கப்படும்.

“லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம். நடனம் என்பது ஒரு சிறந்த கலை வெளிப்பாடாகும். பிரபு தேவா சாரை தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும். ‘லக்ஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். படத்தில் என்ன இருக்கும் என்ற ஒரு ஆவலை ட்ரைலர் ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். பேபி டித்யா சூப்பர் சென்சேஷனல் சிஷ்யையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் உண்மையில் திரையில் கலக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ்க்கு ஒரு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார் நடனப்புயல் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். நிரவ்ஷா நடன காட்சிகளை மிகச்சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். இந்த படத்திலும் எடிட்டர் ஆண்டனி தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். “லட்சுமி” நடனம் சர்வதேச தரத்திலும், எமோஷன் இந்திய தரத்திலும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று படக்குழுவாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் படத்தை தயாரித்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் விஜய் தன்னம்பிக்கையோடு.

Back To Top
CLOSE
CLOSE