Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.அண்ணாதுரை இயக்கும் படம் “ K 3 “

காமதேனு இண்டர்நேசனல் படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ k3 “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை – பிரத்வய் சிவசங்கர் ( இவர் A.R.ரகுமான் இசை பள்ளியின் மாணவர்.
பாடல்கள் – இயக்குனர் ரவிசங்கர்
எடிட்டிங் – கே.தணிகாசலம்
நடனம் – அஜய்சிவசங்கர்
கலை – கதிர்பத்மநாபன்
தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.அருணாச்சலம்
தயாரிப்பு – காமதேனு இண்டர்நேசனல்.
இணை தயாரிப்பு – என்.திருமுருகன், வி.பிரகாஷ்ராஜ்
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் – எம்.எஸ்.அண்ணாதுரை
படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை கூறியாதவது…
இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த படம் அதனால் தான் இந்த படத்திற்கு “ k3 “ என்று பெயர் வைத்துள்ளோம்.
அந்த மூன்று இளைஞர்கள் கூலிப்படையாக எப்படி மாறுகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இருகிறார்கள். அவர்கள் கூலிப்படையாக மாற காரணம் அவர்களது சூழ்நிலைதான். அதைதான் இதில் சொல்கிறோம்.
காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த படம்.
படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார் அது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.
படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE