Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் & திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும்

EROS

ஈராஸ்இன்டர்நேஷனல்நிறுவனம் திருப்பதிபிரதர்ஸ்நிறுவனத்துடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான உலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகியவற்றை வெளியிடஉள்ளது.

சென்னை,மும்பைபிப்ரவரி 10 2015: இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின்திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான பத்மஸ்ரீஉலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன.

இந்த இரண்டில் உத்தமவில்லன் கமல்ஹாசன் உடன் அனுஷ்காஷெட்டி நடித்து கமல்ஹாசன் கதைஎழுதி ரமேஷ்அரவிந்த் இயக்கியதிரைப்படம். இந்ததிரைபடத்தின் முன்னோட்டம் கடந்த பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. மேலும்இந்ததிரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம்தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிமுருகன் திரைப்படமும் சிவகர்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கியுள்ள காமெடி திரைப்படம் ஆகும். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வருத்தப்படாதவாலிபர்சங்கம் திரைப்படம் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது பற்றி ஈராஸ்நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் திரு.சுனில்லுல்லா கூறியதாவது, முன்னணி இயக்குனரான லிங்குசாமியின் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியசினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படத்தையும், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படத்தையும் வெளியிடுவது மிகவும்பெருமையாக உள்ளது இவ்வாறு கூறினார்.

திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லிங்குசாமி இதுகுறித்து கூறியதாவது, இந்திய சினிமாவில் வெற்றிகரமாகவும் மிகவும் வலிமையான நிறுவனமான ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் உத்தமவில்லன் திரைப்படத்தையும் , தமிழ்சினிமாவின் பிரபலநடிகரான சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படத்தையும் வெளியிடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மேலும் ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் செல்லவுள்ள நீண்ட, வெற்றிகரமான பயணத்திற்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று திரு.சுனில்லுல்லா அவர்களின் முன்னிலையில் கூறினார்

Back To Top
CLOSE
CLOSE