Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ஹரீஷ் – மாளவிகாமேனன் நடிக்கும் “ வெத்து வேட்டு ”

விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர். ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக விழா பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.மற்றும் இளவரசு,கஞ்சாகருப்பு,ஆடுகளம்நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன்மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா,நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில்சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கலை – உமாசங்கர் , ஒளிப்பதிவு – காசி
யுகபாரதி பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைக்கிறார்.
நடனம் – தினா , ஸ்டன்ட் – ஆக்ஷன்பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – A.V.பழனிச்சாமி
இணை தயாரிப்பு – A.லட்சுமணன்
தயாரிப்பு – எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.மணிபாரதி.
படம் பற்றி இயக்குனர் மணிபாரதியிடம் கேட்டோம்….
கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமான இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இது இருக்கும். எழுபது சதவீதம் காமெடி, இருபது சதவீதம் காதல் மற்றும் குடும்பம் சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணைநடிகர்கள் வரவழைக்கப் பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினர். இந்த படத்தின் படிப்பிப்பு கடைசி நாள் அன்று படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகில் உள்ள கோப்பு என்ற கிராம மக்கள் ஐநூறு பேருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தோம் அவர்கள் அனைவரும் படக்குழுவினரை படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.
படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் S.மணிபாரதி.

Back To Top
CLOSE
CLOSE