Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மிக விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் “ஒ காதல் கண்மணி”

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது ‘ஒகாதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.

‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன்கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும்’அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும்12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும்வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் மார்ச் 1ம்தேதி (இன்று) சமூக வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த டிரைலர் ஒரு நிமிடம் இருபது வினாடி….

திரை அரங்குகளில் படத்தின் டிரைலர் மார்ச் 6ம் தேதி வெளியாகும்.

படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள்:

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
கலை : சர்மிஷ்தா ராய்
நடனம்: பிருந்தா
ஆடை வடிவமைப்பு : ஏகா லகானி
தயாரிப்பு நிர்வாகம் – மாலா மன்யன்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்
மக்கள் தொடர்பாளர் : நிகில்

Back To Top
CLOSE
CLOSE