Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’

JINN‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரமீஸ்ராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை. எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படபிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டு இருந்த அந்த கட்டிடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது.”

“ எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்று பீதியை கிளப்பி சிரிப்புடன் விடைபெற்றார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.

Back To Top
CLOSE
CLOSE