Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரகசிய கூட்டம் – நடிகர் விஷால்

IMG_1124நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார்.

நடிகர் சங்கத்துக்கும் நடிகர் விஷாலுக்கு எப்போதுமே பஞ்சாயத்து தான் இந்த இரண்டு பேரில் யாராவது நேரில் சந்தித்துக் கொண்டால் அந்த இடம் தீபாவளி பட்டாசுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் சென்னையில் குறிப்பிட்ட சில நடிகர்களை வரவழைத்து ரகசிய கூட்டம் நடத்தினார். ஏற்கனவே திருட்டு சி.டி. விற்றவர்களை போலீசில் பிடித்து கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தன்னை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டினார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் கருத்துக்கள் வெளியிட்டார்.

இந்த நிலையில் தன் ஆதரவு நடிகர்களை அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். இக்கூட்டம் விஷாலின் வீட்டில் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Back To Top
CLOSE
CLOSE