Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

பிரெஞ்சு நடிகை அலியோன முண்டேனுநடிக்கும் – ஆகம்

இன்றைய காலகட்டத்தில் அயல்நாட்டு பெண்களை தமிழ் படங்களில் நடிக்க வைப்பது மிக எளிதாக ஆகிவிட்டது. முக்கிய வேடங்களில் நடித்து வந்த அயல்நாட்டு நடிகைகள் பின் கதாநாயகிகளாகவும் வலம் வர தொடங்கினார்கள். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் தயாரிப்பில் இளம் கதாநாயகன் இர்ஃபான் நடிக்கும் ‘ஆகம்’ திரைப்படத்தில் பிரெஞ்சு நடிகை அலியோன முண்டேனு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பற்பல சர்வதேச படங்களில் நடித்திருக்கும் அலியோனா சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் ‘ஆகம்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கத்தில் சோஷியல் த்ரில்லர் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஆகம்’.

pic (7)“ இப்படத்தில் நான் பன்னாட்டு நிறுவன அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஆழமான சமுதாயக் கருத்தை சொல்லும் இப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. திரையில் ஆடி பாடி நடித்துள்ள காட்சிகளைக் காண எனக்கு ஆவலாய் உள்ளது. இயக்குனர் விஜய் ஆனந்த் முதல் படத்தில் வேலை செய்யும் கடைசி நபர் வரை அனைவரும் மிக அன்பானவர்கள், வேலையில் மிகுந்த ஈடு பாடு உள்ளவர்கள். ” என்றார்.

“ இங்கு ‘ஆகம்’ குழுவின் விருந்தோம்பலை கண்டு வியந்துபோனேன். இந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் உணவுகள் மிக காரமாகவுள்ளது எனினும் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இங்கு நிறைய படங்களில் நடிப்பேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.’வணக்கம், நன்றி“ எனத் தமிழில் கூறி விடைப் பெற்றார் அலியோனா.

Back To Top
CLOSE
CLOSE