Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

படிப்பும் நடிப்பும் இருக்கும் ‘இந்தியா பாகிஸ்தான்’ – சுஷ்மா ராஜ்

IMG_5052விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் சின்ன இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால்எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் படம் அனுபவத்தை பற்றி கூறுகிறார்.

“ ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அப்படங்களை பார்த்து இந்த வாய்ப்பு எனக்களித்தார் இயக்குனர் ஆனந். இந்த படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்த்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே முடித்தேன் ” என ஆரம்பித்தார் சுஷ்மா

“ தமிழ் எனக்கு அதிக பரீட்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல்காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.”

“நாய்கள் என்றாலே எனக்கு பயம் படத்தின் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடிதத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு சம்பவமாய் இது அமைந்தது.”

“ இப்படத்தில் மனோபாலா, MS பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்றுக் கற்றுக்கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார் யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.”

Back To Top
CLOSE
CLOSE