Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“ இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே “

32 பிளாக் காமெடி படமாக கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, Y.G.மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ்மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள்ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – N.K. பதி, கெளதம் சேதுராம்
இசை – மரியா ஜெரால்டு
எடிட்டிங் – அலெக்ஸ்ராஜ் ஆண்டனி
கலை – எஸ்.அன்பரசன்
நடனம் – சங்கர், ஜானி
ஸ்டன்ட் – ஸ்பீட் மோகன்
பாடல்கள் – விஜய்பிரகாஷ், சாக்ரடீஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள் விஜய்பிரகாஷ் – சாக்ரடீஸ்.
இயக்குபவர் – விஜய்பரமசிவம். இவர் குறும்பட இயக்குனர்.
படம் பற்றி இயக்குனர் விஜய்பரமசிவமிடம் கேட்டோம்…இது முழுக்க முழுக்க காமெடி படம். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்டகதை, மாதிரியான பிளாக் காமெடி படம் இது. மிகப்பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
அது அத்தனையும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கையாளப்படும் பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்த படலாம் என்றார் இயக்குனர் விஜய்பரமசிவம்.

Back To Top
CLOSE
CLOSE