Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் ‘54231’ முழு நீள த்ரில்லர் படம்

unnamed (1)மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘54231’ .
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கி யுள்ளார்.

‘ரம்மி’, ‘தாண்டவக்கோனே’ படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னடவரவு பவித்ரா.

‘நெருங்கிவா முத்தமிடாதே’ நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், ‘பசங்க’ சிவகுமார், நடித்துள்ளனர்.

படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

” படத்தில் 5 பேர் பாத்திரங்கள், 4லைப் ஸ்டைலான விதத்தில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழிதீர்த்தல் என்கிற 1ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே கதை. ” என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

‘காதல்’ புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர்

எடிட்டிங்- ரஜீஷ், ஸ்டண்ட் -திலிப் சுப்பராயன், கலை -ராம், நடனம் -ஷெரீப், பாடல்கள்.- நா, முத்துக்குமார் .
அட்மாஸ் மிக்ஸிங் -மந்த்ராலேப், சவுண்ட் எபெக்ட்ஸ் -இக்பால்,தயாரிப்பு மேற்பார்வை- ராஜ்குமார், ,தயாரிப்பு ஜி,வி,கண்ணன், ராஜா

படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள’ 54321′ படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன். ஸ்டார்ட் செய்யலாம் போலிருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE