Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வில்லனாக நடிக்க மறுத்த சூர்யா

mass Movie stills  (15)வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்’. யுவன் இசையமைத்திருக்கும் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சூர்யா – வெங்கட்பிரபு இணை முடிவான உடன், இரண்டு நாயகர்கள் கொண்ட கதை ஒன்றை தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. அக்கதையில் நடிக்க ரவிதேஜாவிடம் பேசியிருப்பதாகவும், தெலுங்கில் ஒரே சேர படமாக பண்ணலாம் என்ற திட்டத்தையும் தெரிவித்திருக்கிறார்.

அப்படத்தின் கதையை கேட்ட சூர்யா, இப்படத்தில் எனது கதாபாத்திரம் வில்லன் வேடம் மாதிரி இருக்கிறது. இக்கதையில் அஜித், விஜய் மற்றும் மகேஷ் பாபு போன்ற நாயகர்கள் நடித்தால் மட்டுமே சரியாக வரும் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. மேலும், உங்களது பாணியில் ஒரு ஜாலியான படமாக பண்ணலாம் என்று சூர்யா தெரிவிக்க வெங்கட்பிரபு பண்ணிய கதை தான் ‘மாஸ்’.

தற்போது ‘மாஸ்’ என்கிற தலைப்பு வரிச்சலுகைக்காக ‘மாஸு என்கின்ற மாசிலாமணி’ என்று மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE