Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ஸ்டுடியோ கிரீன் வெளியிடும் த்ரிஷா இல்லனா நயன்தாரா’

54116_thumb_665Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படம் அனைவரையும் கவரும் தலைப்பு முதல் கண்கவர் நடிகர்கள் என இளைய நெஞ்சங்களை ஆட்கொண்டுள்ளது. ரசிகர்களை பற்பல இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளது.

நல்ல கமர்ஷியல் படங்களை தெரிவு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தும் Studio Green நிறுவனர் KE ஞானவேல் ராஜா ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிடுகிறார். ஏற்கனவே, டீசர் மூலம் தங்களுக்கான ஆதரவை திரட்டிக் கொண்டது இப்படம். ரசிகர்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்த தெறிக்கும் இசையை ஜூன் 4 ஆம் தேதி சோனி மியுசிக் வெளியிடுகிறது.

நாயகி ப்ரியா ஆனந்தின் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் மேலும் ஒரு ஆச்சர்யத்தைக் உள்ளடிக்கி கொண்டுள்ளது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. “ இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆழகிய நடிப்பை வெளிக் கொண்டுவரும் நாயகி வேண்டும் என்று எண்ணினோம். ப்ரியா ஆனந்த் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். தனக்கே உண்டான உற்சாகத்தாலும் , குதுகலத்தாலும் மொத்த படகுழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார் ப்ரியா ஆனந்த்.” எனக் கூறினார் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

Back To Top
CLOSE
CLOSE