Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

JSK பிலிம் நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது

Kutram-Kadithal-Movie-image-800x415ஒன்றிற்கு ஒன்று புதிதான, தரமான படங்களை மக்களுக்கு இட்டு செல்வதை எண்ணமாகக் கொண்ட JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தங்களது நகைச்சுவை நிறைந்த ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் ஆகிய திரைப்படங்களையும் ஜூன் 19ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

“ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமாரின் இந்த முடிவு இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. “ இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு பாணிகளை NJ ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு புதிதான கதைக்களத்தில் அமைந்த நகைச்சுவை திரைப்படம்.

நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களைப் பற்றி நகைச்சுவையாக கதை விவரிக்கிறது ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.

மக்களிடையே தேசிய விருது படம் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளது ‘குற்றம் கடிதல்’ திரைப்படம். எனினும் விருதுகளை வெல்லும் ஒரு சராசரி கலைப்படமாக இல்லாமல். விறுவிறுவென நகர்ந்து செல்லும், நெஞ்சை படபடக்க வைக்கும் ஆழ்ந்த சமூக கருத்துடன் கூடிய ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ‘குற்றம் கடிதல்’ ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

“ நல்ல திரைப்படங்களை வரவேற்று ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய இரண்டு நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை ஜூன் 19 ஆம்தேதி வெளியிடுகிறோம்.” எனக் கூறினார் J சதிஷ் குமார்.

Back To Top
CLOSE
CLOSE