Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரஜினி – ஷங்கர் – ஷாருக் இது உலகளாவிய பிசினஸாக இருக்கே…

srk-Rajinikanth-collage-24-07-2013பிரம்மாண்டம் என்றால் அது தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் மட்டுமே, இவரின் படங்களில் வரும் காட்சிகளுக்காக இவர் அதிகம் மெனக்கெட்டு அதனை பிரம்மாண்டமாக காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியிருந்த ஷங்கர் தற்போது அவரின் அடுத்த பட வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார்.

அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹிரோவாக ரஜினியும் நடிக்கப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். எந்திரன் படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ரஜினியும், ஷங்கரும் இணைகிறார்கள். கத்தி படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இதுவரை இல்லாதளவுக்கு ஹாலிவுட் படம் மாதிரி இப்படத்தை உருவாக்கப்போகிறாராம் ஹங்கர். மேலும் ரஜினிக்கு வில்லனாக யாரை போடுவது என்று குழம்பிக் கொண்டிருந்த ஷங்கர், அவரின் முதல் சாய்ஸாக சியான் விக்ரமைத்தான் வைத்திருந்தார், ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு பாலிவுட் சூப்பர் ஹிரோவான ஷாருக் கான் நடிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Back To Top
CLOSE
CLOSE