Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

விக்ரம் பிரபு பதில் கிருஷ்ணா நடிக்கும் “பண்டிகை”

pizap.com14339276954461பெரோஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கழுகு, யாமிருக்கபயமே நாயகன் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படம் பண்டிகை. இந்தப்படத்தில் கயல்ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், நிதின்சத்யா உட்பட பலர் நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது இயக்குநர்அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி. இவர் விரைவில் இந்தப்படத்தின் இயக்குநர் பெரோஸைத் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தப்படத்தில் கிருஷ்ணாவுக்கு முரடர் வேடமாம்.

இயக்குநர் பெரோஸ் முதலில் இந்தக்கதையை நடிகர் விக்ரம்பிரபுவுக்குத்தான் சொல்லியிருந்தாராம். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் அவர்தான் நடிக்கப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்காகப் புதியஅலுவகம் ஒன்றைத் தொடங்கி வேலை செய்துகொண்டிருந்தார் இயக்குநர் பெரோஸ்.

ஆனால் விக்ரம்பிரபு எற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்துக்கு வர மிகவும் தாமதமாகும் என்பதால் அந்தப்படம் நடக்காமல் போய்விட்டதென்று சொல்கிறார்கள். அதன்பின் கிருணாவிடம் இந்தக்கதையைச் சொல்லிச் சம்மதம் வாங்கிவிட்டார்களாம். தற்போதைய காதலியும் வருங்காலமனைவியுமான விஜயலட்சுமியின் பெயரிலேயே படத்தைத் தயாரிக்கவும் தொடங்கிவிட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE