Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ – ஹன்சிகா

unnamed (1) ஹன்சிகா, பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும் , நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் உதவும் குணமாகட்டும் அனைத்தும் ஹன்சிகாவை இன்னும் ஒருபடி தமிழ் ரசிகர்களிடையே அவரை நெருக்கம் ஆக்கியுள்ளது. ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இவரது ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை எனத் தன்னை என்றும் புத்துணர்வாய் வைத்து கொள்ளும் ஹன்சிகா
“2015ன் இரண்டாம் பகுதி ‘ரோமியோ ஜூலியட்’ ‘புலி’ படங்களின் வருகையால் மிக பெரியதாய் அமைய போகிறது. ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் ஒரு விமான பணிப்பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நான் செல்லும் இடமெங்கும் என்னை ‘ஜூலியட்’ என்றழைகிறார்கள், ஒரு படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுவது எந்த ஒரு நடிகைக்கும் பெருமை மட்டுமல்ல பெருமிதமான விஷயம்கூட. ரோமியோ ஜூலியட் திரைப்படம் எனக்கதை தந்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி.”
என தன் விலை மதிப்பில்லா புன்னகையுடன் விடைபெற்றார் தமிழக ரோமியோக்களின் ஜூலியட் ஹன்சிகா.

Back To Top
CLOSE
CLOSE