Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் – விஷால்!

downloadநடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். அவர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:–

நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் சங்கம் சார்ந்த நாடக நடிகர்கள் உள்பட 3 ஆயிரம் பேரும் பயன்பெறுவார்கள். ஆனால் தற்போதுபொறுப்பில் இருப்பவர்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதால் தான் தேர்தலில் நிற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.

நீங்கள் எங்கள் அணிக்கு ஓட்டு போடவேண்டும். நடிகர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது தவறு. பிரிவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கருணாஸ் கூறும் போது, சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தை நடிகர்களே சேர்ந்து கட்ட வேண்டும் என கூறினோம். அதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். சங்க உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியதா?. நாடக நடிகர்களையும், சினிமா நடிகர்களையும் ஒன்று சேர முடியாத நிலையை உருவாக்குகிறார்கள் என ஆவேசமாக கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE