Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நட்சத்திரங்களின் பாராட்டு மழையில்… இளையதளபதி விஜய்யின் “புலி” டீசர்

11037049_960770887276811_7818214237278572079_nதென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இளையதளபதி விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் வெகுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய்சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக், கன்னட நடிகர் யாஷ், நடிகைககள் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், நஸ்ரியா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், இயக்குனர்கள் ஹரி, வெங்கட்பிரபு, அட்லீ, சுசீந்திரன், மனோபாலா, பாலாஜிமோகன், தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி தாணு, ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், யூடிவி தனஞ்செயன், ஏ.ஜி.எஸ். அர்ச்சனா கல்பாத்தி, ஜெ.அன்பழகன், சிவசக்தி பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத், இமான் ஆகியோர் “புலி” டீசரை பாராட்டியுள்ளனர். மேலும், 41வது பிறந்தநாளை கொண்டாடிய இளையதளபதி விஜய்க்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனுடன், இந்தி திரையுலகின் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ், புலி பட டீசரில் காணும் போது உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், படத்தில் நடித்த விஜய், ஸ்ரீதேவி ஆகியோருக்கு தனது பாராட்டுகள் என்றும் ட்வீட்டர் மூலம் பாராட்டியுள்ளார்.

புலி படத்தின் டீசர் யு டியூப் இணையதளத்தில் வெளியாகிய ஒரே நாளிலேயே 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் புலி படத்தின் டீசர் உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் திரையரங்குகளில் நேற்று இரவு முதல் திரையிடப்பட்டதால், அதைக்காண திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனுடன் தமிழ் தொலைக்காட்சிகளிலும் புலி படத்தின் டீசர் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே ரசிகர்கள், பொதுமக்கள், மற்றும் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் இடையே படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE