Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“பண்டிகை” படத்தில் பந்தயச் சண்டை வீரனாக கிருஷ்ணா

unnamedமுரட்டு சுபாவத்துடனும் கோபத்துடனும் வளரும் அன்தையான வேலு ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல் ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி தன்னை மாற்றி சராசரி மனிதனாகிறான்.

சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வேலு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிழல் உலகில் illegal-ஆக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபம் வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தயச் சண்டை திகழ, அதில் விரும்பி விழுகிறான்.
வெளுவிற்கு எல்லாம் கொடுத்த இந்த சண்டை எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய பிரச்சனையையும் கொடுக்க. எப்படி அதில் இருந்து அவன் தப்பிக்கிறான் என்பது மீதிக் கதை.

இப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், பருத்திவீரன் சரவணன், நித்தின் சத்யா, சபரிஷ், கோலி சோடா மது சூதனன், பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல திறமையான புதுமுக நடிகர்களையும் இவர்களோடு அறிமுகம் செய்கிறோம்.

விஜயலட்சுமி அகத்தியனின் ‘Tea Time Talks’ தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கும் ‘பண்டிகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது twitter பக்கத்தில் வெளியிட்டார் நடிகை சமந்தா.

‘பண்டிகை’ படத்தின் Firstlook பற்றி சமந்தா கூறுகையில்” பண்டிகை படத்தின் First look அருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய கிருஷ்ணா மற்றும் பண்டிகை படக் குழுவினரை வாழ்த்துகிறேன்’ எனக் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE