Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பொறுமைக்கு பலன் உண்டு நடிகை மகிமா

GAN_68610101வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி “ சாட்டை “ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர்.
அவரை சந்தித்த போது..
சாட்டை அறிமுகம் பற்றி..
பிரபு சாலமன், ஜான்மேக்ஸ் மைனாவுக்கு பிறகு எடுக்கிற படம்..அன்பழகன்னு புது இயக்குனர். சமுத்திரகனி, தம்பி ராமய்யான்னு நட்சத்திர நடிகர்கள். இத்தனை ஜாம்பவான்கள் ஓடுகிற ரேசில் நானும் ஓடினேன். நல்ல நடிகைன்னு பேர் கிடைச்சது. எவ்வளவோ நடிகர், நடிகைகள் அடையாளம் தெரியாமல் போகும்போது. என்னை பாராட்டி எழுதிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோருக்குமே நன்றி! அத்துடன் சாட்டை படத்தின் யூனிட் எல்லோருக்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்.
நிறைய படங்களில் உங்களை நடிக்க கேட்டும் நடிக்க மறுக்கின்ரீர்கலாமே உண்மையா ?
நிறைய படங்களில் நடிக்க கேட்டது உண்மையே. நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடிய வில்லை. இப்பத் தான் படிப்பை முடித்தேன். மொசக்குட்டி, அகத்திணை ரிலீஸாகி விட்டது.
இப்ப விஜய் சேதுபதியுடன் மெல்லிசை, தினேஷ்சுடன் அண்ணனுக்கு ஜே, புரவி எண் என படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன்.
இப்ப கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் ஒரே படத்தில் நடிக்கிறேன்.பூரிஜெகன்நாத் சார் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ வினோத் விஜயன்ங்கிறவர் இயக்கும் படம்.. ராஜீவ் ரவி காமிரான்னு எல்லோருமே ஜாம்பவான்கள். ஷூட்டிங் போயிட்ருக்கு.
பொறுமையா இருந்தா சாதிக்கலாம்கிற தேவ வாக்கின் மகிமையை உணர்ந்தவள். எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்க நான் தயாரில்லை.நடிச்சதுல எத்தனை படம் நல்ல படம்ன்னு கணக்கு பாக்குறவ நான்.
எனக்கு வயசு இருக்கு பொறுமையாக நின்னு சாதிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மகிமா.

Back To Top
CLOSE
CLOSE