Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கமலின் ‘தூங்காவனம்’ படபிடிப்பு முடிய போகுது விரைவில் வெள்ளித்திரையில் …..

Prakash Raj, Trisha Krishnan and Kamal Haasan at Thoongavanam and Cheekati Rajyam first look launchஉத்தம வில்லன்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள்.

‘தூங்காவனம்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

”ஈ.சி.ஆரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான அரங்கில் தற்போது ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இம்மாதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இப்ப தான் ஆரம்பிச்சா மாதரி இருக்கு அதுக்குள்ள பட பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது அப்ப உலக நாயகன் அடுத்த படமும் விரைவில் பார்போம் ஜூலை 3 ம் தேதி பாபநாசம் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறைந்த நாட்களில் நிச்சயம் உலகநாயகன் தரமான படம் குடுப்பார் என்று எதிர்பார்ப்போம் .

‘தூங்காவனம்’ ப்ரெஞ்ச் படமான ‘ஸ்லீப்லஸ் நைட்’ படத்தின் ரீமேக் ஆகும். கமல், த்ரிஷா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதை முழுக்க ஒரே இரவில் ஒரு பப்பில் (PUB) நடைபெறுகிறது.

Back To Top
CLOSE
CLOSE