Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அரசியல் வாழ்க்கையின் நிஜங்களை கோடிடும் கோ-2

IMG_7745RS Infotainment நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில்,ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகி வருகிறது கோ-2. இயக்குனர்கள் விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோருடன் பணிபுரிந்தவர் சரத். கோ-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டருக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா என இரு தேசிய விருதுகளை வென்ற நடிகர்களை இயக்கும் மகிழ்ச்சியை நம்முடன் பகிர்கிறார் அறிமுக இயக்குனர் சரத்.
IMG_4045“படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுப்பட்ட ஒரு படம் எடுக்க எண்ணினேன், ஒரு பொலிடிக்கல் சப்ஜெக்ட் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும் கருதப்பட்டதால் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம். ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிக் கண்ட ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் ‘கோ’ என்பதால் அதன் அடிப்படையில் கோ-2 என டைட்டில் வைத்தோம். ‘கோ-2’ திரைப்படம் ‘கோ’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. எனினும் கோ படத்தில் இருந்த அதனை அம்சங்களும் இதிலும் இருக்கும்.‘கோ-2’ டைட்டில் எனக்கு அதிகபடியான பொறுப்பை அளித்திருப்பதும் உண்மை.

IMG_4862“இரு தேசிய விருது நடிகர்களை இயக்குவது அவ்வளவு அரிதான இன்பம். பிரகாஷ் ராஜ் சார் கதையை கேட்டு மகிழ்ந்து போனார். பின்னர் ஸ்கிரிப்ட் முழுதும் படித்துவிட்டார். இப்பொழுது ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது நடிப்பு சிலிர்ப்பூட்டுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய விருது என்னும் இமாலயத்தை எட்டி பிடித்துள்ளார் பாபி சிம்ஹா. தன்னால் இதற்கு மேலும் செய்ய முடியும் என ஒவ்வொரு முறையும் நிருபிக்கும் ஒரு நடிகர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஒருவரை ஒருவர் யார் மிஞ்சுவது என்ற போட்டி காண்பதற்கு அற்புதமாய் இருக்கும்.” எனக் கூறினார் இயக்குனர் சரத்.
IMG_7443“ RS Infotainment நிறுவனம் இயக்குனர்களின் இடம். படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் எங்களது தயாரிப்பாளர் படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தையும் உடனுக்கு உடன் கிடைக்க செய்தார். லியோன் ஜேம்ஸ் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுக படுத்தியுள்ளோம். திரை இசையில் இவர் நிறைய சாதிப்பார் என்பதற்கு இவர் இசை அமைத்து கொடுத்து உள்ள பாடல்களே அத்தாட்சி. எல்லா வகையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் அரசியல் வாழ்க்கையின் நிழல் உலகு விஷயங்களை பற்றி கோடிட்டு காட்டும் இந்த கோ-2.” என நிறைவு செய்தார் இயக்குனர் சரத்.

Back To Top
CLOSE
CLOSE