Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (19.07.2015) மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள சங்கம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது . இதில் திரைப்பட நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் இசை தகடை வெளியிட அதனை அஞ்சுக்கு ஒண்ணு பட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

AnjukkuOnnu  (58)விழாவில் பேசிய கருணாஸ் அவர்கள் இந்த விழாவை நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதலாவதாக கலந்து கொண்ட விழாவாகவே கருதுகிறேன் .

நாங்கள் நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்றதும் சின்ன பட்ஜெட் படங்களை ஊக்குவிப்போம் , அதே போல் சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்தது 100 – 150 திரையரங்குகள் கிடைக்க வழி செய்வோம் என்று உறுதி அளித்தார் .

அதனை தொடர்ந்து பேசிய விஷால் அவர்கள் இது போன்று சிறிய பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளிவந்த பின்பு தான் அது சிறிய படமா பெரிய படமா என்று தீர்மானிக்கும். அதே போல் புதுமுக நடிகர்கள் பொறுமையும் நேர்மையும் கடைப்பிடித்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறலாம். அவ்வாறு தான் நானும் வெற்றிப்பெற்றேன் என்று நடிகர் விஷால் கூறினார் .

விழாவில் தயாரிப்பாளர் எவர்கிரீன் S சண்முகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று பேசினார் . இயக்குநர் ஆர்வீயார் நன்றியுரை வழங்கினார் .

இசையமைப்பாளர் சாஹித்யா அவர்களுக்கு நடிகர் விஷால் அவர்கள் பொன்னாடை போற்றினார்.

இவ்விழாவில் படத்தின் நடிகர்கள் , நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்

Back To Top
CLOSE
CLOSE