Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் ‘ களம்’ – ராபர்ட் S ராஜ்

அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன் , ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் ‘களம்’. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் ராபர்ட்.S. ராஜ் கூறியதாவது “ ‘களம்’ சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணி திரைப்படம். படம் பார்க்கும்பொழுது ஆடியன்ஸ் எதிர்பார்பதை மட்டுமின்றி எதிர் பாராததையும் ஆச்சர்யம் ஊட்டும் வகையில் ஒரு கதை நடையை கொண்ட திரைப்படம் ‘களம்’. வழக்கமான ஒரு திரைக்கதைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். சூபீஷ் K சந்திரன் கதை,திரைக்கதை மற்றும் வசனத்தில் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்”, எனக் கூறினார் ராபர்ட்.”

“தொழில்நுட்பத்திலும், கதையம்சத்திலும் சர்வதேச தரத்தினுடையதாய் அமைய திறன் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது ‘களம்’ திரைப்படம். வெளி வர இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டீசெர் மூலம் திரை உலகினர் இடையே பெரும்பெயர் எடுத்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘ரௌத்திரம்’ புகழ் பிரகாஷ் நிக்கி இசைஅமைக்க ,பிரபாகர் படத்தொகுப்பு செய்கிறார். ‘எந்திரன்’ திரைப்படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனர்கள் ‘களம்’ படத்தில் CG பணிகளை மேற்கொண்டுள்ளார்கள் .என்பது குறிப்பிடத்தக்கது.

“ படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டினுள் அமைந்திருக்கிறது. அந்த வீடுதான் படத்தின் ஜீவ நாடி என்பதால் அந்த தேடுதலே எங்கள் உழைப்பில் பல நாட்களை விழுங்கியது.அந்த தேடுதலின் பலன், நாங்கள் தேடிய மாதிரியே ஒரு ஜமீன் வீடு கிடைத்தது.அந்த வீடுதான் செந்தூர பூவே படத்தில் வந்த வீடு என்றதும் எங்களுக்கு ரொம்ப பெருமைதான். படத்திலும் அது ஒரு ஜமீன் வீடாகவே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதை மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளையும் எண்ணத்தில் கொண்டு எங்கள் குழு முழு திறத்தில் வேலை செய்துள்ளோம். ‘களம்’ அனைத்து விதமான ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாய் அமையும்.” எனக் கூறினார் அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ்.

Back To Top
CLOSE
CLOSE