Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’ – ஸ்ரீகிருஷ்ணா

இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’. JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளிவருகிறது.

Naalu Polisum Nalla Irundha Oorum (13)தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா படத்தைப் பற்றி கூறுகையில் “‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ திரைப்படம் குற்றமே செய்யாத, நல்லொழுக்கம் வளர்ந்து நிற்கும் ‘பொற்பந்தல்’ என்ற கிராமத்தில் இருக்கும் நான்கு போலிஸ்காரர்கள் பற்றிய கதை இது. சிறு விஷயத்தையும் பூதாகரமாக எண்ணிக் கொள்ளும் போலீஸ்காரராக அருள்நிதி நடித்திருக்கிறார். நல்லதை மட்டுமே குழந்தைகளுக்கு போதிக்கும் டீச்சராக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

Naalu Polisum Nalla Irundha Oorum (10)“படம் முழுவதும் தென்காசி, குற்றாலத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் படபிடிப்பு நடத்தினோம். படபிடிப்புக்காக அனைத்து கிராமங்களையும் முழுக்க சுத்தம் செய்து திருக்குறள், பொன்மொழிகள் என ஆங்காங்கே எழுதி வைத்தோம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நாங்கள் ஷூட்டிங் முடிந்த பின்னரும் அந்த கிராமத்து மக்கள் இதை பின்பற்றுகிறார்கள் என்பதே மகிழ்ச்சி..நாங்கள் படப்பிடிப்புக்கு போகும் போது கூட எங்களுடைய கண்களுக்கு ஏற்ற கிராமமாக இருந்தால் போதும் என்று நினைத்து தான் போனோம், ஆனால் படம் பிடிக்கும் போதும் படப்பிடிப்பு முடிந்து வந்தப் பிறகும் அந்த கிராமம் எங்கள் கருத்துக்கும் உகந்த கிராமமாக இருந்தது என்பதே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. .

“படத்தின் கதாப்பாத்திரங்கள் படும் அவதிகள் படம் பார்பவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும். ‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’ ஒரு முழு நீள காமெடி கமர்ஷியல் திரைப்படம். திரையரங்கிற்கு வருவோர்க்கு மகிழ்வையும்,மன நிறைவையும் தரும் ‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’” எனக் கூறினார் புதுமுக இயக்குனர் NJ ஸ்ரீகிருஷ்ணா.

Back To Top
CLOSE
CLOSE