மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஐந்தாம் பாகமாக கிரிஸ்டஃபோர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’(MissionImpossible: Rogue Nation) திரைப்படம்.
கதாநாயகன் டாம் க்ரூஸ் ஏற்று நடித்து உள்ள ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்துக்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இல்சா கதாப்பாதிரத்தில் நடித்திருக்கிறார் கதாநாயகி ரெபேக்கா ஃபெர்குசன். “படத்தில் இரத்தத்தை உறைய வைக்கும் பல சண்டைக் காட்சிகளில் இல்சா கதாப்பாத்திரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது, இதற்கு ஏற்றவாறு வெளிப்படையாக தெரிய வேண்டிய உடல் பலமும் , அதை உள்ளடக்கி கொண்டு நடிக்க தேவையான மன உறுதியும் அதே நேரத்தில் ரசிகர்களை கவரக் கூடிய நடிகைக்கான தேடலில் கிடைத்தவர்தான் ‘ஹெர்குலஸ்’ படத்தின் நாயகி ரெபேக்கா ஃபெர்குசன்.” என்றார் மிஷன் இம்பாசிபிள் படத்தின் இயக்குனர் கிரிஸ்டஃபோர் மெக்குவாரி.
“ படத்தில் Action காட்சிகள் அதிக வேகமாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டேன். பயிற்சியின் போக்கில் இல்சா கதாப்பாத்திரத்தின் அழகான இயல்பும், கூரிய நகங்களும், பலம் வாய்ந்தவர்களை தாக்கும் வேகமும் பூனையை ஒத்து இருந்தது.” கூறினார் ரெபேக்கா.
எனது இந்த சாகச பயிற்சிகள் என்னை எங்கு கொண்டு செல்கிறது என தெரிந்தது. எனக்கு உயரம் என்றால் பயம் எனினும் மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக அசாதாரணமான உயரக் கட்டிடங்களில் இருந்து சாதாரணமாக குதிக்க வைத்துள்ளனர். எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது. சவால்களை மிஞ்சும்போது எஞ்சுவது சாதனையே” எனக் கூறினார் ரெபேக்கா ஃபெர்குசன்.
இந்தியாவில் Viacom18மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படம் மிஷன் ‘இம்பாசிபிள்: முரட்டு தேசம்’ என்று தமிழில் வெளியாகவுள்ளது.