Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

முன் எப்போதும் கண்டிடாத டாம் க்ரூஸின் ஆழ்கடல் சாகசம் : மிஷன் இம்பாசிபிள்-5

டாம் க்ரூஸ் நடிப்பில் கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி cruise on stuntsஉலமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு படம் வித்தியாசமான சாகசங்களை மேற்கொள்ளும் டாம் க்ரூஸ் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation) திரைப்படத்தில் கார், பைக், விமானம் என பல சாகசங்களை செய்துள்ளார். இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் மிஷன் ‘இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ என்று தமிழில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி மிஷன் இம்பாசிபிள்-5 படத்தில் டாம் க்ரூஸின் சாகசங்களைப் பற்றி கூறும்பொழுது “ மிஷன் இம்பாசிபிள் தொடரின் முந்தைய பாகங்கள் வெவ்வேறு விதமான ஆச்சர்யம் ஊட்டும் சாகசங்களை காட்சியாய் கொண்டு இருந்தது. கதாநாயகன் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் எதற்கும் துணிந்தவன் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் A400 விமானத்தில் தொங்கும் காட்சி ரசிகர்களை கண்டிப்பாக உறைய வைக்கும். இருப்பினும் டாம் க்ரூஸ் யாரும் தன்னை எளிதில் மதிப்பிட விடமாட்டார். மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ படத்தில் எல்லா வற்றையும் கடந்து தன் மூச்சை அடக்கி கொண்டு நீருக்கு அடியில் பல மணி துளிகள் நடித்துள்ளார்.” எனக் கூறினார்.

“நான் ஆழ் கடலில் நீந்தி உள்ளேன். இவ்வாறு மூச்சை அடக்கி அடக்கி கொண்டு 200 அடி ஆழத்தில் நடித்தது இல்லை. நீருக்கு அடியில் இப்படி நடிப்பது சற்று கடினமாகாவே இருந்தது. எனினும் எனது தீவிர பயிற்சி இத்தகைய காட்சியில் நடிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. மற்ற கடினமான காட்சிகளைக் காட்டிலும் இக்காட்சியில் நடித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனது உடலை பற்றி நிறைய விஷயங்களை கற்று எனது பயிற்சி கற்று தந்தது” என டாம் க்ரூஸ் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE