Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

உனக்கென்ன வேணும் சொல்லு – நடிகை மொஹ்ர்னா அனிதா ரெட்டி

மொஹ்ர்னா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்தி Mouhrna Anitha (4)பெற்றவர். இவர் தற்போது ‘உனக்கென்ன வேணும் சொல்லு ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது.
‘ என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும் , இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதா பாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்த பாத்திரத்தின் வீரியத்தை புரிந்துக் கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்க போவது யார் என்று அவரிடம் கேட்டு கொண்டே இருந்தேன். கதையை சொல்லி முடித்ததும் தீர்மானமாக சொன்னார் ‘ நீ தான் என்று’.
சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு ஊட்டிய தன்னிம்பிக்கை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து , படம் பார்த்த பின்னர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் தவிக்கும் சமுதாயத்தின் மேல் தட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன்.அந்த பெண்ணுக்கு சமுதாயத்தில் பேறு இல்லாததால் அவளுக்கு நடக்கும் அவமானங்களும் அதன்
தொடர்ச்சியாக அவளுடைய செய்கையும் அந்த செய்கையின் வாயிலாக அவள் ஒரு அம்மானுஷ்ய சக்திக்கு உயிர் கொடுத்து இருப்பதும் தான் படத்தின் மைய கரு. சமுதாயத்தில தாய் இல்லா பிள்ளைக்கு கிடைக்கும் அரவணைப்பு , பிள்ளை இல்லா தாய்க்கு கிட்டுவதில்லை. அந்த பிரச்சினை தான் நம் கண்ணுக்கு சமுதாய பிணி என்பேன்.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் , சக நடிக நடிகையர் , இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பாளர் ஷான், மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனதார்க்கும் என் மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE