Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’ விருது!

பாயும்புலி’ ஆடியோ விழாவில் இயக்குநர் சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’என்கிற விருது வழங்கப் பட்டது .
விழாமேடையிலிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கவிஞர் வைரமுத்து, நடிகர்விஷால், பட அதிபர்கள் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி..மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாண்டிராஜ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் சூரி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரின் முன்னிலையில் இந்த விருது வழங்கப் பட்டது. வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா விருதை அறிவிக்க பிலிம் சேம்பர் முன்னாள் தலைவர் சி.கல்யாண் விருதை இயக்குநர் சுசீந்திரனுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.சிவா பேசும் போது “சினிமாவில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்பவர்கள் மிகவும் குறைவுதான் எஸ்.பி.எம்,கே.எஸ்.ரவிகுமார்,விக்ரமன் மாதிரி தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று சிலரை மட்டுமே சொல்ல முடியும். அந்த வரிசையில் சுசீந்திரனும் இணைந்து இருக்கிறார். அவரை தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.வேந்தர் மூவீஸிடம் சொன்ன தேதிக்கு முன்னதாகவே ‘பாயும்புலி’ படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார். ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்கவில்லை ,படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார். அவரைப் பாராட்டி வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பில் ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’என்கிற விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ” என்றார்.
அப்போது மேடையிலிருந்த படக்குழுவினர் உள்பட அனைவரும் கைதட்டி வாழ்த்தினர்.

Back To Top
CLOSE
CLOSE