Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

பாபி சிம்மாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிக்கும் – மசாலா படம்

சமீபமாக திரை உலகம் சந்தித்து வரும் மிக பெரிய சவால் சமூக வலை தள விமர்சகர்களிடம் இருந்து தான் என்பது masala padam posterபொதுவானக் கருத்து. படத்தை பற்றிய விமரிசனம் செய்வது காசு கொடுத்து படம் பார்பவனின் உரிமை என்று ஒரு சாராரும் , சினிமா என்பது ஒரு வியாபாரம்,அடுத்தவர் வியாபாரத்தை விமரிசித்து வீழ்த்த இவர்கள் யார் என்று ஒரு சாராரும் வாத பிரதிவாதங்களை வைத்து தர்க்கம் செய்து வருகிறார்கள். ஆல் இன் Pictures என்னும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில, ‘வெண்ணிலா கபடி குழு’
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஆகிய படங்களின் ஒளிபதிவாளரான ,பிரபல ஒளிபதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘ மசாலா படம்’ இந்தக் கருத்தை மையமாக வைத்து தான் படமாக்க படுகிறது.

‘ என்னுடைய முதல் படம் சராசரியான ஒரு கதையாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.அதற்க்கு ஏற்றக் கதையை பற்றி யோசிக்கும் பொது எனக்கு தோன்றியது தான் இந்தக் கதை. எல்லோரும் விமரிசகர்கள் தான் என்ற நிலையில் தான் இன்றைய சினிமா உள்ளது. யார் செய்வது சரி , விமர்சனம் என்பது உரிமையா அல்ல அடுத்தவர் வியாபாரத்தை கெடுக்கும் முயற்சியா , விமர்சனத்துக்கு எல்லை கோடு உண்டா , என்ற பல கேள்விகளுக்கு ‘மசாலா படம் ‘ தான் சிறந்த பதில். கதையைப் பற்றி விவாதித்த உடனே படத்தை தயாரிக்க முன்வந்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான விஜய் ராகவேந்தராவுக்கு என் முதற் கண் நன்றி. நாயகர்கள் பாபி சிம்மாவுக்கும் , மிர்ச்சி சிவாவுக்கும் இந்தப் படம் அவர்களது பயணத்தில் முக்கிய படமாகும்.கதாநாயகியாக லக்ஷ்மி நடித்து உள்ளார்.இசை அமைப்பு கார்த்திக் ஆச்சாரியா.இதைப் போன்ற படங்களுக்கு பெரிய ஊக்கமே படத்தை முறையாக பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடும் விநியோகஸ்தர் தான் . அந்த முறையில் சமீபத்தில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களான ‘டெர்மினடர்’ ‘ Mission impossible ‘ ஆகிய படங்களை தென்னகமெங்கும் விநியோகம் செய்த Auraa சினிமாஸ் மகேஷ் , எங்களது ‘மசாலா படம்’ அக்டோபர் 2ஆம் தேதி வெளி வர சீரிய முயற்சிகளை மேற் கொண்டு உள்ளார். ‘மசாலா படம்’ ரசிகர்களுக்கு மட்டுமல்ல விமர்சகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் ‘ என நம்பிக்கையுடன் தெரிவித்தார் லக்ஷ்மன் குமார்.

Back To Top
CLOSE
CLOSE