Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் – “பிரபா”

தமிழ்த்திரை நிறுவனம் தயாரிக்கும் “பிரபா” என்கிற திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இது Braba Movie Stills  (19)கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக “சுவாசிகா” நடிக்கிறார். இதில் நிறைய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அறிமுகமாகின்றனர்.கதாநாயகனாக – விஜயராம், வில்லனாக – ரஜினிபாணி, போலீஸ் அதிகாரிகளாக – G. ராஜ் / ‘போட்டோ சயின்ஸ்’ ரமேஷ், குழந்தை நட்சத்திரமாக – ‘பேபி’ தமிழிசை, ஒளிப்பதிவாளராக – S. முத்துராமலிங்கம், இசையமைப்பாளராக – S.J. ஜனனி, ஆர்ட் டைரக்டராக – டிஜே, பாடலாசிரியர்களாக – மா. மதிமாறன் / ஸ்ரீதேவி / சபிதா போஜன், பாடகியாக – சவுமியா தணிக்காசலம், காஸ்ட்யூம் டிசைனராக – தேன்மொழி நந்தன்,இவர்களுடன் ‘தென்றல்’ சரவணன், ‘ஆடிட்டர்’ ஜெரால்டு ஆகியோர் அறிமுகமாகின்றனர். மற்றும், சொற்கோ, ரமேஷ் வைத்யா இருவரும் பாடல் எழுதி இருக்கின்றனர். V. சத்தியநாராயணன் எடிட்டிங் செய்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா இப்படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார். இணை தயாரிப்பு – ரஜினிபாணி, N. முருகன். இயக்குனர் Braba Movie Stills  (25)தரணியின் உதவியாளர் நந்தன் எழுதி, தயாரித்து இயக்குகிறார். இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறும் போது: இது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள, பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான படம். பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து வெளியே வர மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாமல் ‘பெண்களே போராடி வெற்றி பெற வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த “சுவாசிகா” “பிரபா” திரைப்படத்தில் நவநாகரீக பெண்ணாகவும், முற்போக்கான சிந்தனை உள்ள பெண்ணாகவும், ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இது அவருக்கும், எங்களின் குழுவிற்க்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படம் என்று நம்பிக்கையுடன் இயக்குனர் நந்தன் கூறுகிறார்.

Back To Top
CLOSE
CLOSE