Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

லிங்குசாமிக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன்- இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி

தமிழ் நாட்டில் உள்ள திரை அரங்குகள் ‘ஜிகினா’ படம் திரை இடப் படுவதன் மூலம் ஆகஸ்ட் 21 முதல் ஜொலிக்க Jigina Movie Working Stills (34)உள்ளது.பெரிதும் எதிர் பார்க்கப் பட்டு வரும் இந்தப்படத்தின் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி கூறும் போது ‘இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோடு , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக் கடல் அவர்களுக்கு என் மனமார்ந்த்த நன்றி.கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய முதல் பெயர் விஜய் வசந்த் தான்.படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்ட செய்வார்கள். புது முகம் சானியாதாரா மிகவும் துடிப்பானவர்.அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது ‘கும்கி’ அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோர். இன்னொரு சிறப்பு அம்சம் இசை என்பேன்.எல்லோரையும் பெரிய அளவுக்கு கவர்ந்து உள்ளது.என்னுடைய தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், பட தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள். ‘ஜிகினா; படத்தை வெளி இட முன் வந்த எனது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமிக்கும் , அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர் , அந்த வகையில் ‘ஜிகினா’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம் ‘என்று உறுதிப்படக் கூறினார் ரவி நந்தா பெரியசாமி.

Back To Top
CLOSE
CLOSE