Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி – செந்தமிழன் சீமான் வாழ்த்து

வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அசாத்திய கலைஞன் சூரி!
– நடிகர் சூரிக்கு நாம் தமிழர் கட்சி பிறந்த நாள் வாழ்த்து!

நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்திரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது. தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும் உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.

திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

Back To Top
CLOSE
CLOSE