Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“கொள்ள அழகுக்காரி” என்ற பாடலுக்கு டூயட் ஆடிய மா.கா.பா.ஆனந்த் – சிருஷ்டி டாங்கே

பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து Navarasa Thilagam Movie Stills (14)தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார். ஒளிப்பதிவு – ரமேஷா / இசை – சித்தார்த் விபின் / பாடல்கள் – யுகபாரதி மோகன்ராஜ் / கலை – சீனு / நடனம் – தினேஷ் / ஸ்டன்ட் – மகேஷ் / தயாரிப்பு நிர்வாகம் – லோகு – சங்கர் / தயாரிப்பு மேற்பார்வை -ஆஸ்கார் நாகராஜ் /இணை தயாரிப்பு – கே.ஜெயச்சந்திரன் ராவ்/தயாரிப்பு – சுதர்சன வெம்புட்டி.
Navarasa Thilagam Movie Stills (17)கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன். படம் பற்றி இயக்குனர் காம்ரன் கூறியதாவது… மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை. ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை செய்து உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்பது தான். அவனது தாரக மந்திரமாக இருப்பது “ ஒரே டீல் ஓஹோன்னுவாழ்க்கை” இது தான். அரை குறையாகத் தெரிந்த தொழிலை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா பன்னீர் சேர்த்த சொத்து எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இந்த கதாப்பாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். உடன் கருணாகரன் கேட்கவா வேண்டும். சமீபத்தில் மா.கா.பா.ஆனந்த் – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற “ கொள்ள அழகுக்காரி போறாலே முன்னால நல்லா இருந்தவன வழி மாற வெச்சாளே “ என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் படமாக்கினோம். செம ஜாலியான படமாக “ நவரச திலகம் “ உருவாகி உள்ளது என்றர இயக்குனர் காம்ரன்.

Back To Top
CLOSE
CLOSE