Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜிந்தா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நவரச நாயகன் கார்த்திக்

சினிமா பார்க்கும் ரசிகர்கள் யாரை கேட்டாலும் நான் நடிகர் கார்த்திக்கின் ரசிகர் என்றும் அவரது துடிப்பான நடிப்பு தங்களுக்கு Jindhaa Movie Pooja Stills (15)மிகவும் பிடிக்கும் என்றுக் கூறி கொள்வர்.அவரை அறித்தவர்கள் திரை உலகில் அவருக்கு மீண்டும் பெரிய வரவேற்ப்பு இருக்கும் என்பதை கணித்து கொண்டு இருந்தனர். ‘அநேகன்’ படத்தில் பெரும் பெயர் பெற்றதைத் தொடர்ந்து கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கோலாகலமாக துவங்கியது. ‘ஜிந்தா’ என்ற தலைப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதா பாத்திரம் மூலம் தனது பயணத்தை தொடர்கிறார்.எஸ் ஏ எப் சினி மாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ் ஏ ராஜா தயாரிக்க, இயக்குனர் வசந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் கே வெற்றி செல்வன் இயக்குனராக அறிமுகமாக ,ஏ ஆர் ரகுமானின் சகோதிரியின் மகன் ஹசார் காசிப் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘கப்பல்’ படம் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி இளம் இயக்குனர்களின் முதல் தர தேர்வு ஆக இருக்கும் வைபவ் நாயகனாக நடிக்க , அவருக்கு Jindhaa Movie Pooja Stills (8)இணையாக நடிப்பவர் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமான சுஷ்மா ராஜ். ‘இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி ஆகும். இந்தக் கதைக்கு உற்சாகமும் , துள்ளலும் தான் மூல தனம். இந்தக் கதையை நான் எழுதும் போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக் சாரும் ,வைபவும் தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தது.தயாரிப்பாளர் ராஜா சார் என்னுடைய நெருங்கிய நண்பராவார்.என்னுடைய கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றுபவர் போஜன் கே தினேஷ். படத்தொகுப்பு கே எம் ரியாஸ் முஹம்மது . ‘ஜிந்தா’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படம் ஆக இருக்கும் ‘ என்று கூறினார் இயக்குனர் எஸ் கே வெற்றி செல்வன்.

Back To Top
CLOSE
CLOSE