Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘மசாலா படம்’ பரிமாற ரெடி

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய டேர்மினடர், மிசன் இம்பாசிபல்,ஆகிய படங்களை வெளியிட்ட Auraa சினிமாஸ் SAC English_ver 01_revஇந்த மாதம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தை வெளியிட உள்ளனர். இதைத் தொடர்ந்து All in pictures என்னும் புதியபட நிறுவனம் தயாரிக்க , பிரபல ஒளிபதிவாளர் லக்ஷ்மன் இயக்கத்தில், பாபி சிம்மா, மிர்ச்சி சிவா நடிக்கும் ‘மசாலா படம் ‘ என்னும் படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ளனர். ‘ இன்று வரும் படங்கள் ஏறத்தாழ ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் தரமாக வந்துக் கொண்டுதான் இருக்கிறது.என்ன தான் உணவு பிரமாதமாக சமைக்க பட்டாலும் பரிமாறப்படும் போது தான் அந்த உணவுக்கான மரியாதையே கூடுகிறது. எங்களது நிறுவனம் நல்ல தரமான் படைப்புகளை தேர்ந்து எடுத்து , அதை உரிய வகையில் மக்களிடம் சென்று சேர்க்கும் பணியை நிறுவனம் செய்யும்.இப்பொழுது எங்களது நிறுவனத்தின் சார்பில் அடுத்து வெளியிடப்பட உள்ள படம் ‘மசாலா படம்’.பெரிதும் எதிர்பார்க்க படும் படம்.சமூக வலைதளங்களில் சினிமாவை masala padam posterவிமர்சிப்பவர்களுக்கும் ,அப்படி செய்யக் கூடாது என சொல்லும் திரை உலகினருக்கும் இடையே நடக்கும் வாதத்தையும், பிரதி வாதத்தையும் படம் பிடித்துக் காட்டும் கதைதான் ‘மசாலா படம்’. இயக்குனர் லக்ஷ்மன் மிகவும் சுவராசியமாக இந்தக் கதையை கையாண்டு இருக்கிறார்.இந்தக் கதை நிச்சயமாக யாரும் சொல்லாதக் கதைதான், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் இப்படி ஒரு கதை தோன்றி இருக்காது.அந்த வகையில் இவ்வளவு வித்தியாசமான கதையை தேர்ந்து எடுத்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்தப் படத்தின் இசையை வெளியிடும் பழம்பெரும் நிறுவனமான லஹரி நிறுவனத்தாருடன் இணைந்து பணி புரிவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நாளை ‘கேளு மச்சி கேளு , சினிமா பொறந்த கதை கேளு ‘ என்ற துள்ளலான பாட்டை வெளி இடுகிறோம்.இந்தப் பாடல் ‘மசாலா படம்’ பரிமாறப்பட ரெடி என அறிவிக்கும்’ என்று கூறினார் auraa cinema நிறுவனர் மகேஷ்.

Back To Top
CLOSE
CLOSE