Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

புத்தன் இயேசு காந்தி’ படத்திற்காக பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டி அசத்திய வசுந்தரா

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் Puththan yesu Gandhi Movie stills (2)பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு. இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் வருகிறது. மிகச் சிறப்பாக கார் ஓட்டும் வசுந்தராவுக்கு உண்மையில் பைக் ஓட்டத் தெரியாதாம். இதற்காக அவருக்கென படக்குழுவினர் பல நாட்கள் பைக் ஓட்டக் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டார் வசுந்தரா. அதன்பின் பைக் ஓட்டும் காட்சியில் மிகவும் துணிச்சலாக வேகமாக பைக் ஓட்டி நடித்திருக்கிறார். பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டியிருக்கிறார். அவரது துணிச்சலை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் அவரை பாராட்டினர்.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் புத்தன் இயேசு காந்தி’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE