Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? – கபிலன்வைரமுத்து விளக்கம்

Kabilan Vairamuthuஸ்ரீசாய் சர்வேஷ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. இயக்குநர் கண்மணி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன. இதில் கவிஞர் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு” என்று தொடங்குகிறது படத்தின் புரோமோ சாங். இப்பாடலின் வரும் “வேப்பமரம் சாஞ்சாலும் வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்ற வரியில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் (வெளக்கமாரு) இடம்பெறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது. ஆனால் அக்கட்சியின் பெரும்பாலான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கின. இந்த நிலையில் “வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்று கபிலன் எழுதியிருப்பது அரசியல் நையாண்டியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கபிலன்வைரமுத்து அளித்திருக்கும் விளக்கத்தில் “பேய்களை வெளக்கமாரு கொண்டு ஓட்டினாலும் அவை மறுபடியும் வரலாம் என்று படத்திற்கு பயன்படும் ஃபேண்டஸி அர்த்தத்தில்தான் நான் எழுதியிருக்கிறேன். இதைப் பாடலாக எடுத்துக்கொள்வதும் அரசியலாக கருதுவதும் அவரவர் பார்வையைப் பொருத்தது” என்று பதிலளித்திருக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE