Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாம் நினைவேந்தல் விழாவில் பேசிய நடிகர் விஷால்

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாம் நினைவேந்தல் விழா !

Lachiya Nadigar SSR Rajendran First Memorial Tribute Function Stills (84)விழாவில் நடிகர் விஷால் பேசியது , எனக்கு இன்று மிகுந்த காய்ச்சல் ,பேசி பேசியே காய்ச்சல் வந்துவிட்டது இருக்கட்டும் இன்னும் 5 நாட்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. எனக்கு மேடையில் பேச வாய்ப்பளித்த எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி. இதை போன்ற மேடையில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.இங்கே விஜய குமாரி அம்மாவின் அருகே அமர்ந்து பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யாருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு இது. எனக்கு அவர்கள் அருகே அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி , ஏன் என்றால் என்னுடைய தந்தை விஜய குமாரி அம்மாவின் மிக பெரிய ரசிகர். இப்போது தொலைகாட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.வாரம் வாரம் வெள்ளி கிழமை ஒரு புது பையன் ஒரு புது பொண்ணு என்று வரிசை கட்டி வந்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் என்னுடைய ஆசை எல்லாம் பழம்பெரும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாதனையாளர்களை எல்லா நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டும் என்பது தான். இதை நான் தேர்தல் சமயத்தில் கூறுவதால் எல்லோரும் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இதை நான் மனதில் இருந்து பேசுகிறேன். நமக்கெல்லாம் அவர்கள் தான் வழிகாட்டிகள். அவன் இவன் படத்தின் படபிடிப்பில் இருக்கும் போது ஆர்யா என்னிடம் சத்தியஜித் ரே அவர்களை பற்றி நான் ஒரு நாள் பேசியதை நினைவில் வைத்து சத்ய ஜோதி நிறுவனத்தை நினைவு கூர்ந்து பேசினார் நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரே அவர்களை தெரியவில்லை , அதே போல் ஆர்யா அம்பிகா அம்மாவை புதுமுகமா என்று ஒரு நாள் கேட்டு என்னை அதிரவைத்தார். நான் அவர்களை அழைக்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் அது தான் என்றார்.

நான் இன்னும் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன் , எஸ்.எஸ்.ஆர் ,எம்.ஜி.ஆர் ,சிவாஜி ஆகியோரின் ஆத்மா எங்களுக்குள் இப்போது இறங்கி நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட எங்களை தயாராக்கி வருகிறது.

Lachiya Nadigar SSR Rajendran First Memorial Tribute Function Stills (43)லட்சிய நடிகரின் புதல்வர் ராஜேந்திரன் பேசியது , என் மகன் பங்கஜ் குமார் நடிகர் சங்கத்தில் உள்ளார். அவர் என்னிடம் வந்து பாண்டவர் அணி இந்த விழாவை சிறப்பாக எடுத்து நடத்த விரும்புவதாக கூறினார். நான் கண்டிப்பாக நடத்தலாம் என்று கூறினேன். எப்போது பாண்டவர் அணியினர் எங்களுக்கு ஆதரவாக விழாவை நடத்த முடிவெடுத்தார்களோ , அப்போதே நாங்களும் பாண்டவர் அணியில் ஒருவர் ஆகிவிட்டோம்.லட்சிய நடிகரை போல் தெளிவான தமிழிலில் பேச இங்கு எவரும் இல்லை. எந்த ஒரு நடிகரும் அழகாக தமிழிலில் பேச வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் அனைவரும் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் படத்தை பார்க்க வேண்டும் என்றார்.

Back To Top
CLOSE
CLOSE