Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண் கலங்கிய சினேகா…

Sneha Birthday stils (38)புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் தவறாமல் நடந்து வருகிறது.

சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சினேகா. அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மன நலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.

நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா அவரைத் தேற்றி அழைத்து வந்து காரில் உக்கார வைத்து அழைத்துச் சென்றார்.

Back To Top
CLOSE
CLOSE