Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்

vishal releaseபத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் தக்கன பிழைக்கும் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் அக்கவுண்டில் இன்று வெளியிட்டார்கள்.

டீஸரை வெளியிட்ட ஆர்யா ‘’ராஜீவ் காந்தி ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார் என்றவுடன் அவரது இயல்பு போலவே ஏதோ ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் டீஸர் மிகவும் சென்சிபிளாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டீஸராக அமைந்திருக்கிறது. படத்தை பார்ப்பதற்காக நானும் காத்திருக்கிறேன்’’ என்று பாராட்டினார்.

TP - tamilவிஷால் ‘’குறும்படத்தோட டீஸரே நல்ல இண்ட்ரெஸ்டிங்கா கொடுத்துருக்கார் ராஜீவ். விரைவில் சினிமாவுக்கும் வந்து நல்ல நல்ல படங்களை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார்.

’’சென்ற ஆண்டு நான் விஷால் அவர்களை பேட்டி எடுக்கும்போது, சினிமாக்குள்ளயும் அரசியல் வந்துடுச்சு போல? என கேட்டதற்கு ’இது காடு மாதிரி. எல்லாமே சர்வைவலுக்காக தான். மானை நோக்கி புலி வந்தா மான் தான் தன்னை காத்துக்கணும். இப்படித்தான் சினிமா மாறிட்டு இருக்கு. அவவங்க சக்திக்கு தகுந்தா மாதிரி ஓடறோம்.அது தப்புனு சொல்ல முடியாது’ என்று பதில் சொன்னார். அவர் சொன்ன பதில் தான் இந்த படத்தின் கரு. டீஸரே அதை சொல்லும். படம் விரைவில் திரையுலகினர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரையிடப்படும்’’ என்றார் க.ராஜீவ் காந்தி.

Back To Top
CLOSE
CLOSE