Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கண்ணன் ராஜமாணிக்கம் தயாரித்து இயக்கும் “சூது வாது”

Soothu Vaathu Movie Still (8)20 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் நான் தான் பாலா படம் முலமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இப்பொழுது எதார்த்த வாழ்வியலை “சூது வாது” மூலம் நமக்கு அளிக்கவிருக்கிறார்.

சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த சுனு லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கின்றார்.

படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் “நண்டு” ஜெகன் நடித்திருக்கிறார். கோவை சரளா, செண்ட்ராயன், டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், “நான் கடவுள்” ராஜேந்திரன், ரூபா ஸ்ரீ நாயர், ஜெரால்டு, என். இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நகைச்சுவைக்கு பெரும்பங்கு கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் இயக்குனர்.

அம்பா சமுத்திரம், குற்றாலம், திருநெல்வேலி, சுந்தரபாண்டிபுரம், குற்றாலம் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள கும்பா உருட்டி அருவியும், அம்பா சமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையமும் படம் முழுவதும் வருவதால் இந்த இரு இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Back To Top
CLOSE
CLOSE