Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

வாழ்வியலை சொல்லும் மாற்று சினிமா ‘பையன்’

PAIYAN MOVIE PAIZAL-RAGAVI (1)ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் படம் ‘பையன்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். ‘பசங்க’ சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன், வடிவுக்கரசி, செந்தி, சுரெஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.ராகுல் இசையமைக்க, பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி ஆகியோர் எழுதியுள்ளனர். ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்க, சேவியர் திலக் படத்தொகுப்பு செய்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக் கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

வழக்கமான படம் என்பதை தாண்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலு மலர்வண்ணன். இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு மாற்று சினிமாவாக, வாழ்வியல் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.

பெற்றோரை விட்டு பிரிந்து நிற்கும் பெரியமனிதத்தனம், காதல் முளைக்கும் காலம், நட்பின் புரிதல்கள், தன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படும் சுயம் என்றெல்லாம் ஒரு பையன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களை வாழ்வியலாக சொல்லி இருக்கிறேன். இது படம் பார்ப்பவர்களுக்கு தங்களது அனுபவத்தை பெறுவது போல இருக்கும் என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.

Back To Top
CLOSE
CLOSE