ரேடியோ பெட்டி வெள்ளித் திரைக்கு அறிமுகமாகும் ஹரி விஸ்வநாத் என்னும் இளைஞரின் ஜனரஞ்கம் சித்திரம். தென் கொரியவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 20ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசை பெற்றிருக்கிறது. தென் கொரிய பட விழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
ஹரி விஸ்வநாத் – சிவில் என்ஜினியர். தந்தை: நவரங் தியேட்டர்ஸ் விஸ்வநாதன். மூத்த நாடக நடிகர். பள்ளி கல்லூரி நாட்களில் அப்பாவின் நாடகங்களைப் பார்த்து பார்த்து ஏற்பட்ட சினிமா மோகம் அவரை கலைத்துறைக்கு இழுத்து வந்திருக்கிறது யாரிடமும் உதவி இயக்குனராகவோ-துணை-இணை இயக்குனராகவோ பயிற்சியே இல்லை.
சினிமா ஆர்வம் உந்தித்தள்ள – முதன் முதலில் ‘இடுக்கன்’ (துயரங்கள்) என்ற ஒரு குறும்படம் எடுத்தார். அது,2013ம் ஆண்டு நார்வே தமிழ்ப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. அதன் வெற்றி அதில் கிடைத்த உற்சாகம் – உந்துதல், இரண்டாவது ஒரு குறும்படம் இயக்கினார் ஹரி விஸ்வநாத். பேசும் வைரஸ் என்பது அதன் தலைப்பு, 2013ல் தயாரானது. அடுத்து முழு நீள திரைப்படம் இயக்கும் ஆசை துளிர் விட்டது. அதன் எதிரொலியில் உருவானது தான். ரேடியோ பெட்டி 83 நிமிடம் ஓடும் படம், 2015ம் ஆண்டுக்கான புஸ் சான் சர்வதேச படவிழாவில் புத்தம் புதிய படைப்புக்கான பிரிவு. கே.என் என் பார்வையாளர்கள் விருதைப் பெற்றது.
தன்னுடைய தாத்தாவுக்கும் – வீட்டிலிருந்த ரேடியோ பெட்டிக்கும் இடையில் இருந்த நட்பு-நேசம்-நெருக்கத்தை அடிப்படையாக வைத்து நெஞ்சை நெகிழ வைக்கும் விதத்தில் உருவாக்கியிருக்கிறார்.