Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ஷீரடி பாபாவாக நடித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன் தலைவாசல் விஜய்

Thalaivasal Vijay Stills (2)நான் இதுவரை தமிழ், மலையாளம் மற்றும் பிறமொழிப் படங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவற்றுள் தலைவாசல், தேவர் மகன் போன்ற சிறந்த பல படங்கள் இருந்தாலும், 2010-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘யுக புருஷன்’ படத்தில் நாராயண குருவாகவும், இப்போது தமிழில் ‘அபூர்வ மகான்’ படத்தில் ஷீரடி பாபாவாகவும் நடித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். மற்ற படங்களில் நடிப்பது என்பது வேறு. ஆனால், நாராயணகுரு, பாபா போன்ற மகா புருஷர்களின் பாத்திரமாக நடிப்பதென்பது கிடைத்தற்கரிய பேறு என்றுதான் சொல்ல வேண்டும். வேறெந்த படங்களிலும் இல்லாத மனநிறைவு இப்படங்களில் நடிக்கும்போது கிடைத்தது. நாராயண குருவாக நடித்ததற்கு கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது (special jury award) எனக்குக் கிடைத்தது. தெலுங்கில் ஏற்கெனவே ஷீரடி பாபாவாக நாகார்ஜூன் நடித்துள்ளார். பாபா குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் படம் இது. ஐந்தாண்டுகளுக்குள் மீண்டும் ஒரு மகானின் பாத்திரத்தில் தமிழில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஒரு பாக்கியமாகவும் ஒரு தமிழ்நடிகனாக இருப்பதைப் பெருமையாகவும் கருதுகிறேன். நாராயண குரு படத்தைப் போன்றே பாபா படத்திலும் கருத்தை உள்வாங்கிச் செய்திருக்கிறேன். எனவே, பாபா படமும் எனக்கு அத்தகைய பெருமையைத் தேடித்தரும் என்றே நம்புகிறேன்.

Back To Top
CLOSE
CLOSE