Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மஜீத் அபு இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “ புதுசா நான் பொறந்தேன் “

Puthusa Naan Poranthen Movie Stills (1)சஹாரா எண்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகீர் ஜேன் தயாரிக்கும் படம் “ புதுசா நான் பொறந்தேன் “
இந்த படத்தில் பியோன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தென்காசி பட்டிணம் படத்தில் சின்ன வயது சரத்குமாராக நடித்தவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட நாற்பது படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு மலையாளப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக கல்யாணி நாயர் நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், சார்மிளா, பெஞ்சமின், மாபியா சசி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – தாமஸ் / இசை – கணேஷ் ராஜா / பின்னணி இசை – வி.தஷி / எடிட்டிங் – அபிலாஷ் / கலை – உண்ணி / நடனம் – அக்ஷயா ஆனந்த் / ஸ்டன்ட் – மாபியா சசி / பாடல்கள் – கணேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – பிஜு, பேச்சிமுத்து / தயாரிப்பு – ஷாகீர் ஜேன் / கதை, திரைக்கதை, வசனம் – பாலு / இயக்கம் – மஜீத் அபு. இவர் ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..24மணி நேரத்தில் நடக்கும் திகில், காதல் மற்றும் ஆக்க்ஷன் போன்றவற்றை உள்ளடக்கிய கதை. படு பயங்கரமான கொலைகாரனை பற்றிய செய்தி டி.வி. ஒன்றில் ஒளிபரப்பாகிறது அதை பார்த்து நாயகி கல்யாணி. இவன் நிச்சயமாக என்னை இன்று கொன்று Puthusa Naan Poranthen Movie Stills (21)விடுவான் என்று அழுது புலம்புகிறார்! அவசரமாக வெளியூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரது தந்தை அதை புரிந்து கொள்ளாமல், பக்கத்துக்கு வீட்டில் பியோனிடம் மகளை பார்த்து கொள்ளும்படி விட்டுவிட்டு செல்கிறார். கல்யாணி சொன்னபடி கொலைகாரன் அவளை கொலை செய்தானா..இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பை முழுவதும் கொடைக்கானலில் இரவு நேரத்திலேயே நடத்தினோம்.திகில் படத்திற்கான முக்கிய அம்சமே நேர்த்தியான ஒளிப்பதிவு, பின்னணி இசை, பரபரப்பான திரைக்கதை இவை மூன்றும் இப்படத்திற்கு கூடுதல் பலம். கலாபவன் மணி இந்த படத்தில் கண்டிப்பு மிக்க போலீஸ் அதிகாரியாக நடித்து படத்திற்கு வழு சேர்த்துள்ளார்.
இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE